நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!
தங்கம் விலை தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று (மார்ச் 6) காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எனினும் தங்கம் விலை குறைந்த , இரண்டே மணிநேரத்தில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8060க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
இந்த நிலையில், இன்று (மார்ச் 7 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,030க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6600க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,800க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.108க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.