தங்கம் விலை மாற்றத்தால் நகைப்பிரியர்கள் கவலை
ஜூன் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று ஜூன்20ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
அதன் படி, இன்று ஜூன் 21ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,780கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,554க்கும் ஒரு சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்வு
அதேவேளை வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்குரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.98.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.