15 வருடங்களாக பெண் பாலியல் பலாத்காரம்; போலிச் சாமியார் அரங்கேற்றிய கொடுமை
இந்தியா மராட்டிய மாநிலம் புனே கராடி என்கிற பகுதியில் நவீன குருகுலம் என்கிற பெயரில் ராதாமோகன் மிஸ்ரா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் ஒரு போலி சாமியார் என சொல்லப்படுகிறது.
இவரிடம் தெய்வீக சக்தி இருப்பதாக நம்பிய ஒரு குடும்பம் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவரின் பக்தர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். அன்றாட நிகழ்வுகளை எழுதி வாங்கி அதை வைத்து அவர்களை வசியம் செய்து அவர்களை தாந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார் ராதாமோகன் மிஸ்ரா.

தெய்வீக சக்தி இருப்பதாக நம்பிய குடும்பம்
அதோடு அந்த குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை தனிமைப்படுத்தி கடந்த 15 வருடத்திற்கு மேல் அந்த பெண்ணை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்ததோடு சித்திரவதையும் செய்து வந்திருக்கிறார்.
சாமியார் சொன்னதை அந்த பெண் கேட்காத போது அந்த பெண்ணுக்கு மின்சார ஷாக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு சாமியாரின் சிறுநீரை கட்டாயப்படுத்தி அந்த பெண்ணை குடிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்த சித்திரவதைக்கு சாமியாரின் ஆசிரமத்தில் இருந்த ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பெண்ணின் பெயரில் உள்ள சொத்துக்களை ஏமாற்றி தன் பெயருக்கு மாற்றி எழுதவும் சாமியார் முயற்சி செய்திருக்கிறார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த போலிச் சாமியார் ராதா மோகன் மிஸ்ரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 8 பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
அதோடு அந்த ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் போலிசாமியாரின் செயல் அம்பலமாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.