அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!
அவுஸ்திரேலிய நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 100 ஆண் மற்றும் பெண் ஆடுகளில் 31 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆடுகளின் பெறுமதி 11,532,938 ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் 34,983,630 ரூபா செலவில் 10 ஆண் மற்றும் 90 பெண் போயர் வகை ஆடுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
குறித்த ஆடுகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இனப்பெருக்கம் செய்து பண்ணைகளுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் இந்த ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளில் 06 ஆண் ஆடுகளும் 25 பெண் ஆடுகளும் உயிரிழந்துள்ளன. அதற்குக் காரணம் இந்நாட்டின் சுற்றுச் சூழல் நிலைமைகள் ஒத்துவராமைதான் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுகளின்படி, இந்த உயிரிழப்புகள் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதிக்குள் நிகழ்ந்துள்ளன. ஆடுகளின் பாரம்பரிய உணர்வுகளை மதிப்பிடாமல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட 4 பெண் ஆடுகள் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இவை பல்வேறு வைரஸ் தொற்றுகளுக்கு உள்ளாகி உள்ளதாகிய நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதி செய்யும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவை கொண்டுவரப்படும் இடங்கள் இல்லாமையாலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 69 ஆடுகள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் கணக்காய்வு அதிகாரிகளின் கணக்காய்வில் தெரியவந்துள்ளது.