கிராமங்களுக்கு செல்லுங்கள்; மொட்டு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து
கிராமங்களுக்கு சென்று தமது மக்கள் செல்வாக்கை பலப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு நாட்டின் உண்மையான நிலைமையை விளக்குமாறு ஜனாதிபதி மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலை நடத்த கோரிக்கை
எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தலை கோருவதாக பொதுஜன பெரமுன எம்பிக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்த போது தேர்தலை நடத்துவது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் என தெரிவித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி இந்த விடயங்களை பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
You My Like This Video