சீனா வீட்டுக்கு போ கோசத்துக்கு தலைமையேற்பேன்!(Video)
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் நாடாளுமன்றில் இன்று கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கூறுகையில் , சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.
தாம் அண்மையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு, கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர், டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளார். இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...