Go Home Ranil; சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் புகைப்படம்
Go Home Ranil தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்ததால் அரசியலில் இருந்து ராஜபக்சர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கத்தினால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையில் அரசாங்கத்திற்க்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள், தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சவும் ,நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்க்ஷவும் பதவி விலகி இருந்தனர்.
எனினும் கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகாததால் மக்கள் அரச மாளிகைகை முற்றுகையிட்டிருந்தனர். இதனையடுத்து கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
தொடர்ந்து அவரது இராஜினாமைவை அடித்து ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள நிலையில் , இன்னும் 7 நாட்களில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் மஹிந்த ஜாப்பா அபேவெர்ந்தன கூறியிருந்தார்.
Go Home Ranil எனும் படிகளை கையில் வைத்துள்ள நபர் ஒருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.