ஞானசாரர் விவகாரம் ; அமைச்சர் ஆவேசம்
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் மீண்டும் பேசப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் கருத்து பரிமாறப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவிடம் வினவியபோது அவர் ஆவேசப்பட்டு பதலளித்ததாக தெரியவந்துள்ளது.
இன்று (27) வெளிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற சிறைக் கைதிகளினால் தயாரிக்கப்பட்ட கண்காட்சியில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்டும் போதே இதனை தெரிவித்தார்.

பிக்குகளின் சீருடை அணிவது தொடர்பாக வர்த்தமானி
ஞானசார விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வரவில்லை நீங்கள் கேட்கும் வரை. நீங்கள்தான் அதைக் கொண்டு வருகிறீர்கள். இப்போது சமூக ஊடகங்களிலும் நீங்கள்தான் அதைக் கொண்டு வருகிறீர்கள்.
அப்படி எதுவும் களத்தில் இல்லை. அதுதான் எனது பதில். பிக்குகளின் சீருடை அணிவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது தொடர்பில் கேட்டபோது:அது பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன்.
நான் இந்த கண்காட்சி கைதிகளின் கைவேலைகளை பற்றிப் பேச விரும்புகிறேன்.நான் அனைவரையும் இந்த கண்காட்சிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.