யாழ் முற்றவெளி திடலில் குளோபல் பெயார் - 2023 தொழிற்சந்தை
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார் - 2023 தொழிற்சந்தை யாழ்ப்பாணம் முற்றவெளி திடலில் இன்று காலை ஆரம்பமானது.
அத்துடன் குளோபல் பெயார் நாளையும் தொடரவுள்ளது. இதனூடாக கொழும்பில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து சேவைகளையும் யாழ்ப்பாணத்திலே பெற்றுக் கொள்ளவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு
நிகழ்வில் அமைச்சர்களான மனுச நாணயக்கார, டக்ள்ஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தொழிற் சந்தையில், தொழில் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தொழிலாளர் தொடர்பான விடயங்கள் தொடர்பில், விழிப்புணர்வு வழங்கப்படுவதகாவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.