வரிசையில் காத்திருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி; வைரலாகும் மனோகணேசன் பதிவு!
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.
எரிபொருள், எரிவாயு என்பவற்றிற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அதனை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீண்ட நேரமாக காத்திருந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவங்களும் இலங்கையில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக இலங்கை நெருக்கடிநிலை உலகளாவியரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எரிபொருள் பெற சென்ற சமபவம் குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில்,
வரிசையில் காத்திருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி..! ஆனால் இயந்திரம் சுற்றும்போது, தலையும் சுற்றுது, ப்ரதர்..! பற்றாததுக்கு பணியாள் "கெரகெனவாத சார்" என கிண்டலாக, தன் இயந்திரத்தையா, என் தலையையா என மயக்கமாக கேட்கிறார் என அவர் பதிவிட்டுள்ளமை வைரலாகியுள்ளது.