உங்க குழந்தைகளின் உயரம் அதிகரிக்க வேண்டுமா அப்போ இந்த உணவுகளை கொடுங்கள்
குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
உணவில் ஊட்டச்சத்து சரியான அளவில் இல்லை என்றால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை.
குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும்.
குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி மட்டுமல்லாமல் குழந்தைக்கு சரியான அளவிலான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் உணவுகள் கொடுக்கப்படுகின்றதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல.
அதனால் உடல் பருமன் ஏற்படுமே தவிர உயரம் கூடாது.
கொடுக்க வேண்டிய உணவுகள்
பாதாம்
காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உங்கள் குழந்தையின் அறிவாற்றலை மட்டுமல்லாது, உயரத்தையும் அதிகரிக்கும்.
ஏனெனில் பாதாம் புரதத்தின் சிறந்த மூலமாகும், இதில் ஏராளமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அவை செல்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதுடன் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும்.
இதனால் எலும்புகள் வலுப்பெற்று உயரம் அதிகரிக்க உதவும். பாதாமில் நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E ஆகியவை நிரம்பியுள்ளன.
இது கொழுப்பை கரையக்கூடிய வைட்டமின் என்பதால் எலும்புகளின் சிறந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிக்கன்
புரதம், வைட்டமின் B12, நியாசின், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றின் சிறந்த கலவையாக சிக்கன் உள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், செல்களை சரிசெய்யவும், உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன.
நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12 இருப்பது உயரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனினும் பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளது தான் நல்லது.
முட்டை
முட்டை சூப்பர் புட் என அறியப்படுகிறது. இதில், புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.
காலை உணவில் உங்கள் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பது மிகவும் சிறந்தது.
இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன.
இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்
சோயா பீன்ஸ்
உயரத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.
இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் சிறப்பாக உதவும். அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது சிறந்தது.
பீன்ஸ்
பீன்ஸ் உயரமாக வளர வியக்கத்தக்க அளவில் உதவும். இது தசை வலிமை, அறிவாற்றல் வலிமை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இதில் புரதங்கள், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
செல் மற்றும் திசு மீளுருவாக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.
இதுமட்டுமின்றி, நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தினசரி உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்வதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
தயிர்
தயிரில் கால்சியம், பால் கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்புகள், தசைகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும் உதவுகிறது.
கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பால்
ஏறக்குறைய அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுவதால் பால் ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகமில்லை.
இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கின்றன எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுங்கள்.
இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.
கீரை
கீரையில், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ ஆகியவை உயரம் அதிகரிக்க உதவும்.
இதிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும்.
கீரை மட்டுமல்லாது, முட்டைகோஸ், பிராக்கோலி ஆகிய பச்சை காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.