பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்த யுவதி தொடர்பில் சுகாதார அமைச்சர் கருத்து
பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்த 21 வயதான சமோதி சந்தீப்பணியின் மரணத்திற்கு அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் .
உயிரிழந்த சமோதி சந்தீப்பனியின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது .
விசேட வைத்தியர்கள் அடங்கிய குழு விசாரணை
இந்த குழு இன்று சனிக்கிழமை (15) பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (14) தெரிவித்தார்.
எனினும் , போதனா வைத்தியசாலையில் மரணித்த குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லையென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
மேலும் யுவதியின் மரணம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணையின் ஊடாக அதனை உறுதிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார் .
அதேவேளை கடந்த 11 ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக அனுமதிக்கப்பட்ட பொத்துபிட்டிய அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்தே யுவதியின் மரணத்திற்கு காரணம் என யுவதியின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.