ஆபாச படங்களை காண்பித்து சிறுமி 5 மாதமாக பலரால் வன்புனர்வு;கிழக்கில் பயங்கரம்
அம்பாறை நிந்தவூர் பகுதியில் கடந்த 5 மாதமாக நடைபெற்று வந்த ஆபாச நடவடிக்கைகளில், 12 வயது சிறுமி பல்வேறு சந்தேக நபர்களால் வற்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2025.12.11 அன்று 12 வயது மதிக்கத்தக்க தனது சொந்த மகளை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

சொந்த மகளை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தலைமைறைவாகிய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த சம்பவத்துடனான வழக்கு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் கடந்த தவணை நடைபெற்ற போது விளக்கமறியலில் வைக்கப்பட்ட தந்தை தவிர ஏனைய 4 சந்தேக நபர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அடையாள அணி வகுப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி 4 சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பில் சரியாக இனங்காட்டினார். பாதிக்கப்பட்ட 12 வயதான சிறுமி பாதுகாப்பு கருதி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில் இறுதியாக வொலிவேரியன் கிராமத்தில் வைத்து கைதான சந்தேக நபர் கல்முனை குடி பகுதியை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட குடும்பஸ்தர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர் இன்று உரு மறைக்கப்பட்ட நிலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆந் திகதி அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்த பணிப்புரை விடுத்த நீதிவான் வழக்கினை மறு தவனைக்கு ஒத்திவைத்தார்.
அத்துடன் முறைப்பாட்டுக்காரரான 12 வயது மதிக்கத்தக்க சிறுமியினால் கூறப்பட்ட பெயர்கள் யாவும் சந்தேக நபர்களின் பட்டப் பெயர்கள் ஊர்களில் அழைக்கப்படுகின்ற பெயர்கள் ஆகையினால் தான் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளtஹாக தெரிவிக்கபப்டுகின்றது