மாணவியை கடத்தி தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் ; துடிதுடித்து பிரிந்த உயிர்
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள பாலங்கா பகுதியில் 15 வயது மாணவியை, மர்ம நபர்கள் கடத்திச் சென்று தீவைத்து எரித்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது நண்பியின் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை, வீதியில் வைத்து இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் மாயம்
இந்நிலையில், அப்பகுதியில் பயணித்த சிலர் குறித்த மாணவியை கண்டு தீயை அணைத்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியை கடத்தி சென்ற இளைஞர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை 7 நாட்களுக்குள் கைது செய்ய வேண்டுமென ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.