பிரான்ஸ் வாழ் யாழ் சிறுமியின் நெகிழவைத்த செயல்!
புலம்பெயர் தமிழர்களுக்கு பிரான்ஸ் வாழ் யாழ் சிறுமி முன்னுதாரணமாக திகழும் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
யாழ்.உரும்பிராயைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த ஆதிரா எனும் ஈழத்துச்சிறுமி தனது ஒன்பதாவது பிறந்தநாளை யாழில் அமைந்துள்ள சிறுவர் இல்லப் பிள்ளைகளுடன் இணைந்து அண்மையில் கொண்டாடியுள்ளார்.
கடந்த மாத இறுதியில் தனது பெரிய தந்தையுடன் தாயகத்திற்கு வருகை தந்திருந்தார் சிறுமி ஆதிரா. இதன்போது , ஊரெழுவில் உள்ள சிறுவர் இல்லப் பிள்ளைகளின் நிலமையை அறிந்து அவரது பெரியப்பா இரவுநேர உணவினை வழங்கியிருந்தார். அப்போது குறித்த சிறுமியும் பெரியப்பாவுடன் அங்கு சென்று பார்வையிட்டிருந்தார்.
தாய், தந்தையரிடம் ஆதிரா முன்வைத்த கோரிக்கை
அதன் பின்னர் பிரான்ஸ் திரும்பிய சிறுமி, தனது தாய், தந்தையரிடம் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இங்கு ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாள் வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாடுறோம். ஆனால், அங்குள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே எனது பிறந்தநாளை இந்த வருடம் சிறப்பாகக் கொண்டாட வேண்டாம்.
அந்த நிதியை ஊரெழு சிறுவர் இல்லத்திற்கு அனுப்ப விருப்பம் தெரிவித்திருந்தாராம். இதற்கமைய ஆதிராவின் பிறந்தநாள் வைபவம் கடந்த வாரம் ஊரெழு சிறுவர் இல்லத்தில் இடம்பெற்றது.
பிறந்தநாள் நிகழ்வில் ஆதிராவும், குடும்பத்தினரும் காணொளித் தொழில்நுட்பத்தின் வழியாக இணைந்திருந்தனர். சிறுவர் இல்லப் பிள்ளைகள் பிறந்தநாள் கேக் வெட்டியதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டதுடன் இரவு நேரப் போசணமும் வழங்கப்பட்டது.
இதேவேளை குறித்த சிறுவர் இல்லத்தில் 45 ஆதரவற்ற சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது. நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், இவ்வாறு அநாதரவான குழந்தைகளுக்கு உணவழிப்பது அவர்களது வம்சத்தையே வாழ்வைக்கும் என பெரியவர்கள் சொல்வதுண்டு.
இந்த நிலையில் சிறுமி ஆதிராபோல புலம்பெயர் தமிழர்கள் தங்கள் இல்ல விழாக்களில் இவ்வாறாக ஏழைகுழந்தைகளின் பசியை போக்கலாமே.
You My Like This Video