சிறுமி உயிரிழந்த விவகாரம்; ரிஷாத் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் வீட்டில் உயிரிழந்த 16 வயதுடைய சிறுமி தொடர்பான வழக்கில் ரிஷாத்தின் விளக்கமறியல் உத்தரவு ஒக்டேபர் 14 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை இன்று காலை கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய பிறப்பித்தார்.
இதேவேளை சிருமி உயிரிழந்தமை தொடர்பிலான முந்தைய விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு, பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில் வீட்டுப் பணிக்காக பயணியளராக அமர்த்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் ரிஷாத் பதியூதீனை தவிர மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரர் மற்றும் சிறுமியை கொழும்புக்கு பணிக்காக அழைத்து வந்த தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.