விஷம் குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்த மாணவி ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் விஷம் குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிகிச்சை
இந்த நிலையில் நேற்று அந்த மாணவி வழக்கம்போல பாடசாலைக்கு வந்துள்ளார். அப்போது மாணவி சோர்வாக காணப்பட்டுள்ளார்.
இதனால் அவரிடம் சக தோழிகள் உடல்நலம் சரியில்லையா? என்று கேட்டனர். அதற்கு அவர் தான் விஷம் குடித்துள்ளதாக கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து ஆசிரியைகளிடம் கூறினர்.
பின்னர் அவர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் பள்ளிக்கு வந்து மகளை மீட்டு சிகிச்சைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் அந்த மாணவி மனமுடைந்து விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.