கடல் சீற்றத்தினால் கரையொதுங்கிய இராட்சத திமிங்கலம்!
தமிழகத்தின் இராமேஸ்வரம் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கடல் சீற்றத்தினால் 20 அடி நீளமுடைய பனை திமிங்கலமானது கரை ஒதுங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் கடல் பசு, டால்பின், ஆமை, கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
காற்றழுத்த தாழ்வு நிலை
இதனை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், மீனவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவருகிறது.
நேற்று (டிசம்பர்.11)காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் 20 அடி நீளமுடைய பிரிதேஸ் திமிங்கலம் என்கிற பனை திமிங்கலமானது கரை ஒதுங்கி கிடந்தது.
இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் திமிங்கிலத்தை வனத்துறையினர் மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு கடற்கரை ஓரத்தில் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.