பேர வாவியில் வாத்துக்கள் உயிரிழப்பு; வெளியான காரணம்
கொழும்பு பேர வாவியில் பல வாத்துக்கள் உயிரிழந்தமைக்கு பக்டீரியா தொற்று காரணம் என கொழும்பு மாநகர சபை (CMC) உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த வாத்துக்களை பரிசோதனை செய்ததில் பக்டீரியா தொற்று கண்டறியப்பட்டதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை வைத்தியர் முஹமட் இஜாஸ் தெரிவித்துள்ளார்.
பாஸ்டுரெல்லா மல்டோசிடா’ பக்டீரியா தொற்று
அண்மையில் பேர வாவிக்கு அருகில் வாத்துகள் உயிரிழந்ததை அடுத்து கொழும்பு மாநகர சபை ஹோமாகம கால்நடைப் புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் உயிரிழந்த வாத்துக்களை பரிசோதனை செய்தது.
அதோடு வாத்துகளில் , இரத்தப் பரிசோதனை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உயிரிழந்த வாத்துகள் ‘பாஸ்டுரெல்லா மல்டோசிடா’ என்ற பக்டீரியா தொற்று காரணமாக அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எஞ்சியுள்ள பறவைகள், மிருகங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசிகள் வழங்கும் திட்டம் இன்று (05) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.