பல நாள்களுக்குப் பிறகு எரிவாயு விநியோகம்; விற்பனை முகவர்களால் ஏற்பட்ட களேபரம்!
பல நாள்களுக்குப் பிறகு, ஹட்டன் பிரதேசத்துக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால், இன்று (24) அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், எரிவாயு சிலிண்டரை நுகர்வோருக்கு விநியோகம் செய்யும் போது, விற்பனை முகவர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அதாவது சிலருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு சிலிண்டரை விநியாகித்த முகவர் நிலைய உரிமையாளர்கள், நுகர்வோருக்கு சிலிண்டரை விநியோகிக்கும் பணியை இடைநடுவில் நிறுத்திவிட்டு, ஏனைய சிலிண்டர்களை ஹோட்டல்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸார் தலையிட்டு, நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த்துடன், பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.