சம்மாந்துறையிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்
நாட்டில் தொடர்ந்து எரிவாயு அடுப்புகள் வெடிப்பு சம்பவம் இடம்பெற்று வருகின்றன.
சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைகுட்டப்பட்ட வளத்தாப்பிட்டி கிராம சேவையாளர் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. காலை 10 மணியளவில் தேநீர் வைத்து விட்டு அடுப்பினை அணைத்த பிறகே குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதை உணர்ந்த வீட்டினர் சமையலறைக்குள் சென்று பார்த்தபோது எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தின்போது எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசாருக்கும் கிராமசேவகர் அலுவலருக்கும்அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.