கொழும்பில் உள்ள வீடொன்றில் இன்று வெடித்த எரிவாயு!
கொழும்பு பம்பலப்பிட்டி, பாடசாலை மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் இன்று காலை எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு அடுப்புகளைக் கொண்ட எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகு லேட்டர் மற்றும் எரிவாயுக் குழாய் ஆகியனவே வெடித்துள்ளதாக வீட்டின் உரிமையாளரான பெண் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுப்பை விற்பனை செய்த நிறுவனத்திடம் ரெகுலேட்டர் மற்றும் குழாயை ஆய்வு செய்த போது அதில் குறைபாடுகள் இல்லை என்று சான்றிதழைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் இன்று காலை எரிவாயு அடுப்பை மூட்டிய போது அது வெடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வெடி விபத்தில் எரிவாயு அடுப்பைச் சுற்றியுள்ள பொருட்கள் சேதமடைந்த போதிலும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த எரிவாயு சிலிண்டரை நவம்பர் 26ஆம் திகதி கொள்வனவு செய்துள்ளதாக வீட்டு உரிமையாளரான அப்பெண் மேலும் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.