அரசாங்கத்தின் சதித்திட்டமே எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கள்; எம்பி க்கு எழுந்த சந்தேகம்
நாட்டில் தொடர்ந்து அதிகரிகரிக்கும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம், இந்தியாவில் இருந்து எரிவாயு சிலிண்டரைக் கொண்டு வருவதற்கான ராஜபக்ச அரசின் சதித் திட்டமாக இருக்கலாம் சந்தேக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய தினங்களில் இந்தளவு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தது தொடர்பில் நாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பிரச்சினையில் இருந்து ராஜபக்ச அரசு விலகிச்செல்லாமல் முறையான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, நாங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது எரிவாயு விலை 2 ஆயிரத்து 313 ரூபாயாக இருந்தது. அதனை நாங்கள் ஆயிரத்தி 342 ரூபாவுக்கு குறைத்தோம். ஆனால், அரசாங்கம் எரிவாயு விலையை 2 ஆயிரத்து 675 ரூபா வரை அதிகரித்திருக்கின்றது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பதிலும் சதித்திட்டம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகின்றது.
இதற்குக் காரணம் ஆட்சியாளரின் புதல்வர் ஒருவரின் பெயரில் இந்தியாவில் இருந்து எரிவாயு சிலிண்டரைக் கொண்டுவர திட்டமிட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.