வெள்ளை பூண்டு விவகாரம்; பந்துலவிடம் சிஐடி விசாரணை
சதொச கூட்டுறவு நிறுவனத்திற்கு சொந்தமான வெள்ளை பூண்டு அடங்கிய இரண்டு கொள்கலன்களை பிறிதொரு தரப்பினருக்கு வழங்கியதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் சுமார் 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பந்துலவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் அண்மையில் பதவி விலகிய போது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் வெள்ளை பூண்டு விவகாரம் ஆகியவை குறித்து தான் பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.