வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குப்பை வீச்சு!
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இளைஞர்கள் சிலர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பைத்தியம் பைத்தியம் கோட்டாபயவுக்கு பைத்தியம், ஊரடங்குதான் முடிவென்றால் நீ ஒரு மாடு, சிங்களவர் கிளர்ந்தெழுந்ததால் நீ வீட்டுக்குப்போ, பருப்பு விலை வானமளவு எரிவாயுவை காணகிடைக்கவில்லை என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட வேளை அவர்களின் பின்புறமாக நின்ற இளைஞரொருவர் குப்பைகள் அடங்கிய பெட்டியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தூக்கி எறிந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் இளைஞர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
