யாழில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல்... பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்தில் பல்பொருள் விற்பனை நிலையங்களுக்கு மூன்று பேர் அடங்கிய கும்பல் சென்று, அங்கு பொருட்களை வாங்குவது போல சில பொருட்களை திருடி, தமது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்துச் சென்றமை தொடர்பான காட்சிகள் விற்பனை நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளன.
குறித்த கும்பல் தொடர்ச்சியாக இது போன்ற கொள்ளையில் ஈடுபட்டு வருவதனால், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.