சஞ்சீவ கொலை; கட்டுநாயக்காவில் சிக்கிய யோ யோ
நீதிமன்றத்தில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கமாண்டோ யோ – யோ என அழைக்கப்படும் நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கபப்டுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கமாண்டோ யோ – யோ, கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கெஹெல்பத்தர பத்மேவுக்கு அறிமுகப்படுத்தியவர் எனக் கூறப்படுகிறது.
சந்தேகநபர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கூட்டு நடவடிக்கையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.