கனேமுல்ல சஞ்சீவ கொலை ; பொலிஸாருக்கு ஆட்டம்காட்டும் செவ்வந்தி
நீதிமன்றத்தில் சுட்டுக்கஒலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை நாடளாவிய ரீதியில் பொலிஸார் தேடி வருகின்றனர்.
செவ்வந்திய பிடிப்பதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் வெளியேற்றம்
அதேசமயம் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வெளிநாட்டிற்குச் செல்லவில்லை என்றும், நாட்டினுள்ளேயே தலைமறைவாகியுள்ளதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகம பகுதிகளில் பல இடங்களில் நேற்று விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் , இந்தப் பெண் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தை அடுத்து , தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறித்த பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர் கொழும்பு ஜெயா மாவத்தையில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19 ஆம் திகதி , கொழும்பு -புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில் கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.