கணேமுல்லே சஞ்சீவ கொலை; 10 இலட்சம் பரிசு வழங்க தீர்மானம்
பாதாள உலகக் குற்றவாளியான கணேமுல்லே சஞ்சீவ கொலை சம்பவத்தின் சந்தேக நபரான இஷார செவ்வந்தி குறித்து அறிவிப்போருக்கு 10 இலட்சம் பணப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
கணேமுல்லே சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்ற அறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
10 இலட்சம் பரிசு வழங்க தீர்மானம்
கொலையை திட்டமிடப்பட்டதாக நம்பப்படும் பிங்புர தேவகே இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம்) ரொக்கப் பரிசு வழங்க பதில் பொலிஸ்மா மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
சந்தேக நபருக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும், அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறை அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இஷார செவ்வந்தி தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும், கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக புத்திக மனதுங்க மேலும் தெரிவித்தார்.