கம்பஹாவில் விபத்துக்குள்ளான பல வாகனங்கள்: 10 பேர் வைத்தியசாலையில்!
கம்பஹா பாலும்மஹர பகுதியில் பேருந்து ஒன்று கொள்கலன் ட்ரக் வண்டியுடன் மோதியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை (22-09-2023) கொழும்பு - கண்டி பிரதான வீதியில், இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்கொளியில் நிறுத்தப்பட்டதில், கன்டெய்னர் ட்ரக் வண்டியொன்று பின்னால் சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் ஏழு வாகனங்களும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கம்பஹா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் 10 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காயமடைந்தவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளார்.