நேற்று இடம்பெற்ற கலவரத்தின் புகைப்படங்களின் தொகுப்பு!
நாடளாவிய போராட்டங்கள் வெடித்த நிலையில் இலங்கை எரிமலபோல் குமுறுகின்றது.
நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் போராட்டக்காரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பொங்கியெழுந்த மக்களால் , ஆளுங்கட்சி மற்றும் சில எதிரணி அரசியல் பிரமுகர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது.
அதோடு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மொறட்டுவ மேயர், சனந் நிஷாந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடபிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.










