இலங்கையில் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் குழந்தையின் தற்போதைய நிலை
காலி உனவடுன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழந்த நிலையில் அவரது குழந்தை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (01-12-2022) இடம்பெற்றுள்ளது.

காலி உனவதுன பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது தொடரூந்து மோதியபோது, ரஷ்யப் பெண்ணும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக குறித்த ரஷ்யப் பெண், பணியின் நிமித்தம், 4 அகவையைக்கொண்ட தமது குழந்தையை, பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கவைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
பெலியத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின தொடரூந்தே முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவில் இருந்து குழந்தையின் தந்தை இலங்கைக்கு, நாளை அல்லது நாளை மறுதினம் வரவுள்ளார் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.