யாழில் பான்ட் வாத்தியங்கள் முழங்க நாய்க்கு இறுதிச்சடங்கு!
யாழ்ப்பாணத்தில் மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(15) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, மாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், '
பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் இன நாயானது கடந்த 20.08.2006 அன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் தனது 18வயதை தாண்டிய பைசா சனிக்கிழமை (14) உயிரிழந்தது. இறுதிச் சடங்கினை செய்தவர் கடந்த 10 வருடங்களாக பைசாவினை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பான்ட் வாத்தியங்கள் முழங்க, பைசாவின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பின்னர் எசமானின் காணியில் பைசாவின் உடலமானது அடக்கம் செய்யப்பட்டது.