பாடசாலை பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை
எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே இதனை முன்னெடுத்துச் சென்றோம்.
ஆனால் இப்போது கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனை ஒரு சதவீதமாகக் கூறாமல், பெற்றோருக்கு சுமையாக அமையாத வகையில் டீசல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உயர்த்துமாறு கோருகிறோம்.
மிகவும் சிரமத்துடனேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறோம். பலமுறை டீசல் விலை அதிகரித்தமையால், இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.