மூளை முதல் இதயம் வரை நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க ஆலிவ் எண்ணெயில்
ஆலிவ் எண்ணெய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளன அதனால்தான் இது பல மருந்துகளிலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆலிவ் எண்ணெயில் முக்கியமாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (MUFAs) உள்ளன.
இது ஆரோக்கியமான கொழுப்பாக கருதப்படுகிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெயில் உள்ள பீனால்கள் பெருங்குடல் அழற்சி மற்றும் பிற வகையான அழற்சி குடல் நோய் (IBD) உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
மூளை ஆரோக்கியம்
மூளையில் ரத்த உறைவு அல்லது ரத்தக் கசிவு காரணமாக பக்கவாதம் ஏற்படுகிறது.
இதய நோய்க்கு அடுத்தபடியாக மரணத்தை ஏற்படுத்துவது பக்கவாதம் ஆகும்.
பெருகி வரும் அல்சைமர் நோய்க்கு காரணமான பீட்டா அமிலாய்டு எனும் சுரப்பியை ஆலிவ் எண்ணெய் தடுக்கிறது.
இது மன அழுத்தத்தை அதிகரிக்கும் மாறாக ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால் மனநிலை நன்றாக இருக்கும் மனநலப் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியம்
இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உணவு பழக்கத்தை நிச்சயம் மாற்ற வேண்டும்.
ஆலிவ் எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிட்டால் உடலில் ரத்தம் உறைதல் ஏற்படாது.
அத்தோடு கெட்ட கொலஸ்ட்ரால் பெருமளவு குறையும், இது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும்.
முதுமையை தடுத்தல்
சிலர் முகத்தில் சுருக்கங்கள் வரத் தொடங்கியதால் முதுமையின் தாக்கத்தை இள வயதிலேயே உணரத் தொடங்குகிறார்கள்.
ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் பாதிக்கப்பட்ட சருமம் மெல்ல மெல்ல சீர்படத் தொடங்கும். சுருக்கங்கள் விலகும்.
வைட்டமின் கே ஆலிவ் எண்ணெயில் காணப்படுகிறது இது இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்குகிறது.
முடிக்கு நன்மை பயக்கும்
ஆலிவ் எண்ணெய் கூட நம் தலைமுடியை பராமரிக்கிறது.
முடி வலுவிழத்தல், உதிர்தல், பளபளப்பு இழப்பு மற்றும் முனைகள் பிளவு போன்ற பிரச்சனைகள் அதிகமாகிவிட்டது.
இதற்கு குளிப்பதற்கு முன் உங்கள் தலைமுடியை ஆலிவ் எண்ணெயால் நன்றாக மசாஜ் செய்யவும்.
பின்னர் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலையை கழுவவும்.
புற்றுநோய் ஆபத்து குறையும்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வீடுகள் மற்றும் உணவகங்களில் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக புற்றுநோய் அபாயம் அதிக அளவில் அதிகரிக்கிறது.
ஆலிவ் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன.
இது புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.