யாழில் மதுபான விருந்தில் கொடுரம் ; போத்தலால் தாக்கி நண்பர் கொலை
யாழ்ப்பாணத்தில் மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என்பவரே உயிரிழந்தார்.
குருநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர்.

அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது திடீரென ஒருவர் மற்றையவர் மீது மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
அதில் தலையில் படுகாயமடைந்த நபர், இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தாக்குதலை மேற்கொண்ட குருநகர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.