ரஷ்யா - உக்ரைன் போர்: பாதுகாப்பு காரணமாக பிரான்ஸ் அதிரடி நடவடிக்கை!
ரஷ்யா - உக்ரைன் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரான்ஸ் தனது சாள்-து-கோல்’ விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு போர்க்கப்பல் நகர்த்தப்படுவதாக இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
சைப்ரஸ் தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்த போர்க்கப்பல் நகர்த்தப்பட்டு தற்போது ருமேனியா நாட்டுக்கு அருகே ‘கருங்கடல்’ பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
‘காண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளுக்காக’ இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ அமைச்சர் Florence Parly அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளுக்கு நாங்கள் உதவி செய்ய கடமைப்பட்டிருப்பதால், நாங்கள் கப்பலை அனுப்பினோம்.” என Florence Parly குறிப்பிட்டார்.