பிரான்சில் கொரோனாவின் ஐந்தாவது அலை...மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பிரான்ஸ் நாட்டில் கொரோனவன் ஐந்தாவது அலை உணரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரான்சில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா ஐந்தாவது அலையின் தொடக்கத்தை உணர்கிறோம்.
சில அண்டை நாடுகள் ஏற்கனவே கொரோனாவின் ஐந்தாவது அலையை சந்தித்து வருகின்றன.
அதுபோல எங்கள் நாட்டில் நாங்கள் உணர்வது கொரோனாவின் ஐந்தாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என தெளிவாகத் தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.