பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை!
திஸ்ஸமஹாராமவில் சூதாட்ட மைதானத்தை சுற்றிவளைத்து நபர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வருக்கு மரண தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது .
அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் திஸ்ஸமஹாராம பொலிஸில் கடமையாற்றிய இந்த உத்தியோகத்தர்களே சுற்றிவளைப்பின் போது இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் இருவர் தற்போது பொலிஸில் சேவையில் கடமையாற்றுவதாகவும், ஓர் அதிகாரி ஹங்கம பொலிஸ் குற்றப்பிரிவில் கடமையாற்றுவதாகவும், மற்றைய அதிகாரி அரச புலனாய்வு சேவையில் கடமையாற்றுவதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.