ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஏசி வெடித்து ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் அனைவரும் உறங்கிக்கொணடிருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏசி வென்ட்டில் இருந்து வாயு கசிந்ததால் மின்கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் தீயில் எரிதுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), அவர்களின் மகன் ஆத்விக் (6) மற்றும் மகள் பிரேரனா (8) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, இது விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.