இலங்கையின் முன்னாள் கிரிகெட் அணி வீரர்களின் நெகிழவைத்த செயல்
இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக கட்டப்படும் முதலாவது சிறுவர் நோய் தடுப்பு மத்தியநிலையமான ' சுவ அரண' இற்கு பங்களிப்பு செய்வதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் மிகப் பெரிய பாக்கியமாகும் என இலங்கையின் முன்னாள் கிரிகெட் கப்டன் ரோஷன் மகாநாம பதிவிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த அணி வீர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,
உலகக்கிண்ண வெற்றி அணியில் இடம்பெற்ற வீரராக மடடுமல்லாமல் இந்திரா புற்றுநோய் நிதியத்தின் உறுப்பினராகவும் கலந்துகொண்டமையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நிலையத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில், ஏலத்தில் விடுவதற்காக எம்மால் கையெழுத்திடப்ப்ட 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண ரீ-சேர்ட் உள்ளிட்ட ஏனைய உபகரணங்கள் சில இந்திரா புற்றுநோய் நிதியத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்தோம்.
புற்றுநோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக பல்வேறு செய்திட்டங்களை இந்திரா புற்றுநோய் நிதியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அணியினர் உறுதிபூண்டுள்ளனர்.
புற்றுநோய் தொடர்பாக அறிவுறுத்துவற்காக எனது தனிப்பட்ட நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட on Wednesdays we wear pink" என்ற செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரியும் இத்தருணத்தில் நினைவில் கொள்கின்றேன் என ரோஷன் மகாநாம பதிவிட்டுள்ளார்.