பொறளை மயானத்திற்கு வெளியே கண்கலங்கி நின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
கொரோனா தொற்றினால் நேற்றையதினம் இலங்கையின் முன்னாள் அமைச்சரான மங்கள் சமரவீர உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கொழும்பு பொறளை மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் பொறளை மயானத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கலங்கி நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
மறைந்த அரசியவாதி மங்களவின் இறப்புக்கு, அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இலங்கையின் முன்னாள் ஜானாதிபதிகளில் ஒருவரும் மங்களவிற்கு முகவு நெருக்கமானவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
அன்புள்ள மங்கள, சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒவ்வொரு போரிலும் நீங்கள் உயிர்வாழ்வீர்கள். மங்கள எனது அன்பு நண்பரே சகோதரரே சகபோராளியே. உயிருக்கான போராட்டத்தில் இந்த இருண்ட நாளில் நீங்கள் தோல்வியடைந்துள்ளீர்கள்.
உங்கள் குடும்பத்தவர்களும் நண்பர்களும் உங்களுக்காக போராடினார்கள்,உங்களை உயிருடன் வைத்திருப்பதற்காக அழுதார்கள் கண்ணீர்விட்டார்கள் பிரார்த்தனை செய்தார்கள். நாங்களும் இந்த போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டோம்.
ஆனால் நீங்கள் மரணிக்கவில்லை மங்கள,இலங்கை மற்றும் இந்த உலகிற்கான உங்களின் விசேடமான நோக்கம் உயிர்வாழ்கின்றது , நாங்கள் அருகருகே இருந்து நடத்திய போர் என்றென்றும் வாழும். அன்புள்ள மங்கள, சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒவ்வொரு போரிலும் நீங்கள் உயிர்வாழ்வீர்கள்.
சுதந்திரம்,நேர்மை,ஆட்சி அனைவரையும் உள்ளடக்குதல் பன்முகதன்மைக்கு மதிப்பளித்தல் ஆகியவை காணப்படும் நாடு உருவாகும். அரசியல்வாதிகளை பற்றி கவலைப்படாமல் மக்களை பற்றி உண்மையாக அக்கறை கொள்ளும் ஆட்சி முறையை கொண்ட நாடு உருவாகும். நீங்கள் அனைத்திற்கும் உருவகமாகயிருந்தீர்கள்.
அநீதி ஊழல் ஆகியவற்றிற்கு எதிராக குரல்கொடுக்கும் கிளர்ந்தெழும் ஒவ்வொருவரினதும் இதயத்திலும் நடவடிக்கைகளிலும் நீங்கள் வாழ்வீர்கள். பல அமைச்சு பதவிகளை வகித்தவேளை நீங்கள் ஆற்றிய பெரும்சேவையை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
எங்கள் தொடர்பாடல் ஊடகத்துறையை நவீனமயப்படுத்தும் முயற்சிகளிற்கு நீங்கள் தலைமைவகித்தீர்கள். எங்கள் சர்வதேச உறவுகளை அது வீழ்ச்சியடைந்திருந்த மோசமான குழியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் இலங்கையை மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கும் நீங்கள் பெரிதும் உதவிபுரிந்தீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களின் அப்பழுக்கற்ற தனிப்பட்ட நெறிமுறைகள் இலங்கை அரசியலில் எவரும் நெருங்க முடியாத விடயமாக காணப்படும். இனிவரும் தலைமுறைக்கு எங்கள் இளைஞர்களிற்கு நீங்கள் எப்போதும் உத்வேகமளிப்பீர்கள்.
அன்பு நண்பரே ஓய்வெடுங்கள்,சிறந்த மற்றும் ஒழுக்கமான இலங்கைக்கான போராட்டத்திற்காக திரும்பிவாருங்கள் என அவர் தமது கவலையினை வெளியிட்டுள்ளார்.
