ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் பாதுகாப்பு
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் வரையறுக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமகால ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பு பிரிவுக்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தேவையற்ற அதிகாரிகள் வெளியேற்றும் நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.