முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பாதுகாப்பு நீக்கம் உண்மையா? வெளியான தகவல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்றையதினம் (07-10-2024) தெரிவித்துள்ளார்.
ரணிலின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து வெளியாகியுள்ள அறிக்கை, தொழில்நுட்ப பிழை காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தவறானவை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிஹால் தல்துவ,
“எந்த வகையிலும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்படவில்லை. பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் மற்றும் ஏனைய முன்னாள் அதிகாரிகள் தொடர்ந்தும் உள்ளனர்.
ஆனால் சமீபக் காலம் வரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் தான் தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
முன்னாள் ஜனாதிபதிக்காகதான் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் அதற்கான அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்த அதிகாரிகளும் நீக்கப்பட்டவில்லை. நான் முன்னாள் பணிப்பாளரிடம் பேசினேன், தொழில்நுட்ப ரீதியாக செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் அந்த இடத்தில் தொடர்ந்தும் பணியில் உள்ளனர், அதிகாரிகள் நீக்கம் எதுவும் நடைபெறவில்லை.