மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சுகயீனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை . இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மாத்திரமே மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் வாக்களிக்கவில்லை.