முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிணை
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க போதராகம, இந்த பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை
கடந்த 09ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோத ஈட்டியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.