இலங்கை மக்களின் வீடுகளை சுத்தம் செய்யும் வெளிநாட்டவர்கள்
டித்வா புயலால் பெரும்பேரழிவை சந்தித்த பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் பதுளையில் பாரிய மண் சரிவு ஏற்பட்டு பலர் வீகளை இழந்து நிர்க்கதிக்காகியுள்ளனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்திற்கு தொடர்ந்து அபாயம் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் சேதமடையாத வீடுகளை மக்கள் சுத்தம் செய்து வரும் நிலையில், வெளிநாடவர்களும் மக்களுடன் இணைது வீடுகளை சுத்தம் செய்வதாக கூறப்படுகின்ற்து.