கோர விபத்தில் வெளி நாட்டு பெண்கள் மூவர் காயம்!
புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோதலின் காரணமாக முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த பெண் ஒருவர் வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டார்.
அவரை சுமார் 20 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் மீட்டுள்ளனர்.
விபத்தின்போது முச்சக்கரவண்டியை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே செலுத்தியதாகவும், சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.