கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள்; பல வெளிநாட்டு பெண்கள் அதிரடியாக கைது
கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையங்கள்; பல வெளிநாட்டு பெண்கள் அதிரடியாக கைது கொழும்பில் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் உடற்பிடிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த விபசார விடுதிகள் மீது காவல்துறை தனது சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் முட்டெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா நிபந்தனைகளை மீறி பாலியல் தொழில்
நாட்டுக்கு ற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், விசா நிபந்தனைகளை மீறி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய பொலிஸார் விசேட நடவடிக்கைஅகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி காலி வீதியிலுள்ள ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் டிசம்பர் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு உடற்பிடிப்பு நிலையத்தில் 58 வயதுடைய முகாமையாளர் மற்றும் 9 தாய்லாந்து நாட்டுப் பெண்கள் உள்ளிட்ட பலர் டிசம்பர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
டிசம்பர் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் ஒரு முகாமையாளர் மற்றும் 6 தாய்லாந்துப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கல்கிசை, இரத்மலானை மற்றும் மிரிஹான ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த மசாஜ் விடுதிகள் முறையான ஆயுர்வேத உரிமங்களை வைத்திருப்பது போல் காட்டி, சட்டமீறல்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து, சட்டவிரோதமாக வேலைகளில் ஈடுபடுதல், விசா நிபந்தனைகளை மீறி பாலியல் தொழிலில் ஈடுபடுதல், வெளிநாட்டுப் பணியாளர்களை அனுமதியின்றி பணியமர்த்துதல் போன்றவை இவற்றில் உள்ளடங்கும்.
இந்நிலையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரித்துள்ளது.