விமானநிலையம் சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த துயரம்
விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரஷ்யப் பெண் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் சாரதி உயிரிழந்த நிலையில் காயமடைந்த ரஷ்ய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லொறியுடன் கார் மோதி விபத்து
குறித்த விபத்து நேற்று (23) வியாழக்கிழமை இரவு கொட்டாவ பகுதியில் அதிவேக வீதியின் நுழைவுப் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் லொறியொன்று டயரை மாற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த லொறியுடன் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட விபத்தில் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, காரில் பயணித்த 27 வயதுடைய ரஷ்ய பெண் காயமடைந்த நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளது.